• August 24, 2019
0 Comments

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பாகாநத்தம், தோப்பூர் ஆகிய கிராமங்களுக்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் ஆப்ரேட்டர் சரி வர தண்ணீர் எடுத்து விடாததால் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதுகுறித்து பாகாநத்தம் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் குடிநீர் கேட்டு நேற்று காலிக்குடங்களுடன், மலைப்பட்டியில் இருந்து வேடசந்தூர் செல்லும் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் எரியோடு போலீசார் மற்றும் வடமதுரை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, கிராம மக்கள் சிறை பிடித்த அரசு பஸ்சை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *