• August 17, 2019
0 Comments

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் தனது கணவரிடம் மருந்து வாங்குவதற்காக ரூ.30 கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் அந்த பெண்ணை முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து கணவரின் குடும்பத்தினரும் என்னை வீட்டில் இருந்து விரட்டிவிட்டனர். இப்போது ஆதரவு இல்லாமல் உள்ளேன் என கூறி இருந்தார். புகாரின் பேரில் அந்த பெண்ணின் கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *