• August 17, 2019
0 Comments

நாகர்கோவில்

குமரி மாவட்டத்தில் சில பள்ளி, கல்லூரி அருகிலும், பொது இடங்களிலும் தடை செய்யப்பட்ட புகையிலை போன்ற போதை பொருட்களை சிலர் விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது..

இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது களியக்காவிளை மார்க்கெட் ரோடு பகுதியில் ஒரு பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கடை உரிமையாளர் கனகராஜ் (49) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அந்த கடையில் இருந்து 49 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அருகில் உள்ள இன்னொரு கடையில் சோதனை செய்தபோது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற அஷரப் (42) என்பவரை போலீசார் கைது செய்தனர். அந்த கடையில் 48 பாக்கெட் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *