• August 17, 2019
0 Comments

நாகர்கோவில்

மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி வலியத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (59). கூலி தொழிலாளியான இவர் தனது வீட்டில் மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார். இந்நிலையில் ராஜேந்திரன் தனது மாடுகளை அருகில் உள்ள குளத்தில் குளிப்பாட்டுவதற்காக அழைத்து சென்றபோது, அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்த்தாண்டம் போலீசார், ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *