• August 17, 2019
0 Comments

நீலகிரி மாவட்ட நிவாரண பணிகளுக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் நீலகிரியில் தொடர் மழை காரணமாக கடும் பாதிப்பு ஏற்படுள்ளது. மேலும் அங்குள்ள மக்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நீலகிரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து அன்று முதல்வர், மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 30 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சேத விவரங்களை சேகரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை விரைவுபடுத்தவும், பகுதியாக சேதமடைந்த 1,225 குடிசை வீடுகளுக்கு தலா ரூ.4,100 ரூபாயும், முழுமையாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு தலா ரூ.5,000 ரூபாயும் வழங்க வேண்டும் எள உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *