• August 17, 2019
0 Comments

தமிழ்நாட்டை தனது பூர்வீகமாக கொண்ட மாணவி அமெரிக்காவில் 12-ஆம் வகுப்பு பயின்றுவரும் நிலையில், தனது பூர்வீக கிராமத்தில் உள்ள குளத்தை தத்தெடுத்து அனைவரது பாராட்டுகளையுமு் பெற்றுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மேல வெள்ளூர் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சரவணன்- சரளா தம்பதி. இவர்களுக்கு காவ்யா என்ற மகள் உள்ள நிலையில், இவர் தற்பொது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் 12-ஆவது கிரேடு பயின்று வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் தனது பூர்வீக கிராமத்திற்கு வந்த காவ்யா, முக்கிய நீர் ஆதாரமான பெரிய ஊருணி, 10 ஆண்டுகளாக தூர்வாராமல் புதர்மண்டி இருந்ததை பார்த்துள்ளார். இதனையடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்த காவ்யா பெரிய ஊருணியை தூர்வார முறையாக அனுமதி பெற்று, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

இளம் பருவத்திலேயே இந்த மாணவி வெளிப்படுத்தும் சொந்த மண் மீதான பாசம் அனைவரிடமும் பாராட்டைப் பெற்று வருகிறது. வெளிநாட்டில் வசதி வாய்ப்புடன் இருந்து சொந்த ஊரை மறப்பவர்களுக்கு மத்தியில் ஊருக்காக மாணவி செய்யும் சேவை கிராம மக்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *