• August 17, 2019
0 Comments

அத்திவரதர் தரிசனத்திற்கான அவகாசத்தை மேலும் நீட்டிக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.

கடந்த ஜுலை 1ம் தேதி முதல் காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் நடைபெற்று வருகிறது. இந்த தரிசனத்திற்காக நாடு முழுவதும் உள்ள ஏராளமான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து வரும் நிலையில், தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 16ம் தேதி அத்தி வரதர் தரிசனம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இந்த தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்கக் கோரி ஸ்ரீவைஷ்ணவ ராமானுஜ சபா தலைவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த  உயர்நீதிமன்றம் அத்திவரதர் தரிசனம் நீட்டிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளது. மேலும் அத்திவரதர் தரிசனத்தை நீட்டிப்பது பற்றி அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *