• August 17, 2019
0 Comments

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு கைவிடப்பட்டது என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 2013 வரை” அமைச்சர் பதவியை பயன்படுத்தி  வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த புகாரில் எந்த முகாந்திரம் இல்லை என்பதால் விசாரணை கைவிடப்பட்டது என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஏற்க மறுத்த நீதிபதிகள், வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில், விசாரணையின் அடிப்படையில் காரணம் குறிப்பிடாமல் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்நடவடிக்கை கைவிடப்பட்டது” என குறிப்பிடப்பட்டிருந்தது.  இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *