• August 24, 2019
0 Comments

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே குடிதண்ணீரில் விஷ மருந்து கலக்கப்பட்டதாகக் வெளியான தகவலை தொடர்ந்து, இந்த தண்ணீரை குடித்த பள்ளி மாணவ – மாணவிகள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விருத்தாசலம் அருகே உள்ள டி.வி. புதூர் கிராமத்தில் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் விஷம் கலந்ததாக கூறப்படும் நிலையில், இந்த குடிநீர் அருந்திய மாணவ – மாணவியர், பெரியவர்கள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்த நிலையில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து இது குறித்து சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரத்துறையினர் குடிநீர் குழாய் இணைப்புகளை ஆய்வு செய்தபோது குடிநீரில் விவசாயத்துக்கு பயன்படுத்தும் குருணை மருந்து கலக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து குடிநீர் தொட்டி உடனடியாக சுத்தம் செய்யப்படும் என்றும், கடலூர் மாவட்ட ஆட்சியர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *