• August 17, 2019
0 Comments

திருவண்ணாமலை நடைபெறும் பௌர்ணமி கிரிவலத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என  தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் பௌர்ணமி கிரிவலம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் ஆகஸ்ட் 14, 15 தேதிகளில் வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து இரவு 9.45க்கு திருவண்ணாமலைக்கு ரயில் புறப்படும் என அறிவிக்கப்படுகிறது. மேலும் இந்த சிறப்பு ரயில் கண்ணமங்கலம், ஆரணி, போளூர், துரிஞ்சிபுரம் வழியாக திருவண்ணாமலைக்கு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *