• August 24, 2019
0 Comments

புதுச்சேரி

புதுவை குயவர்பாளையம், பகுதியை சேர்ந்தவர் வரதன் (54) சொந்தமாக ஆட்டோ கன்சல்டிவ் நிறுவனம் நடத்தி வரும் இவர், கடந்த ஜூன் 27-ந் தேதி இரவு தனது மாருதி கரை அலுவலகத்தில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டு மறுநாள் வந்து பார்த்தபோது காரை காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து பெரியக்கடை போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, கடந்த ஜூலை 20-ந்தேதி  கடலூர் மாவட்டம், பண்ருட்டி போலீசார் வாகன சோதனை செய்தபோது, சந்தேகப்படும்படியாக காரை ஓட்டி வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் விழுப்புரம் ஜே.ஜே. நகரை சேர்ந்த மணிகண்டன் (20) என்பதும், அவரிடம் இருந்த கார் வரதனிடம் திருடியது என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து பெரியக் கடை போலீசார் நீதிமன்ற அனுமதியுடன் மணிகண்டனை நீதினம்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *