• August 24, 2019
0 Comments

66-வது தேசிய திரைப்பட விருதுக்கான பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. தமிழில் ’பாரம்’ படத்திற்கு மட்டுமே விருது கிடைத்துள்ளது. மற்ற பிரிவுகளில் தமிழ் படங்கள் இடம் பெறாதது சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தேசிய விருது வழங்குவதில் தமிழ் திரைப்படங்களும், தமிழ் கலைஞர்களும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார். தமிழ் உச்ச நட்சத்திரங்களும், திரை ஆளுமைகளும், தமிழக அரசியல் தலைவர்களும் இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *