• August 24, 2019
0 Comments

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்துள்ள சேசம்பட்டியான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன் (38). கேபிள் டி.வி. ஆப்பரேட்டரான இவருக்கு, குமுதா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று சொந்த வேலையின் காரணமாக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த வேடியப்பன், கருப்ப நாயக்கன்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த பிக்கப்வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிலைகுலைந்த வேடியப்பன் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.

இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் வேடியப்பனை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு வேடியப்பனை கொண்டுசென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக வேடியப்பன் உயிரிழந்தார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *