• August 24, 2019
0 Comments

இலங்கையில் தொடங்கொட பகுதியில் பூட்டப்பட்டிருந்த வீட்டிலிருந்து 3 கோடி ரூபாய் மதிப்புமிக்க சட்டவிரோத மதுபானம் மீட்கப்பட்டுள்ளது. தொடங்கொட – இம்புட்டுகஹாலந்த பகுதியில் வீடொன்றில் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் தொடங்கொட போலீசாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலு ஏற்ப நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த மதுபானங்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்தது. அப்போது 15 பீப்பாய்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த 3ஆயிரத்து 750 லீட்டர் தொகை மதுபான ஸ்பிரித்து மீட்கப்பட்டுள்ளது. போலீசார் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது சம்பவ இடத்தில் சந்தேகத்திற்கிடமான நிலையில் ஒருவரும் இருக்கவில்லை என்பதுடன் இந்த வீடும் பூட்டப்பட்டு இருந்துள்ளது. அப்படியிருக்க இதனுடன் தொடர்புடைய நபரை அடையாளம் கண்டுள்ள தொடங்கொட போலீசார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருவதாக தெரிகிறது.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *