• August 17, 2019
0 Comments

புதுடெல்லி:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழையாக கொட்டித் தீர்த்தது. வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏராளமான மக்கள் உயிரிழந்து உள்ளனர். பலர் மாயமாகினர்.

இந்நிலையில்,வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கேரளா மாநிலம் கடந்த ஒரு ஆண்டுக்குள் மிக மோசமான மழை பாதிப்பை சந்தித்துள்ளது. எனவே, கேரள விவசாயிகள் செலுத்த வேண்டிய விவசாய கடனை செலுத்துவதற்கான காலக்கெடுவை 2019, டிசம்பர் மாதம் வரை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *