• August 17, 2019
0 Comments

இலங்கையில் கல்முனை பாண்டிருப்பில் வயதான பெண் ஒருவரிடமிருந்து பட்டப்பகலில் இரண்டு தங்கச் சங்கிலிகளை மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளையடித்து சென்ற இருவரை இன்று கல்முனைப் போலீசார் கைது செய்துள்ளனர். கல்முனை பாண்டிருப்பில் இருக்கும் தனது வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண் ஒருவரின் இரண்டு தங்கச் சங்கிலிகளை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடந்த 12ம் தேதி காலை 11.00 மணியளிவில் கொள்ளையடித்து சென்றுள்ளனர். அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் இந்தச் சம்பவம் தொடர்பாக கல்முனை போலீசாருக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதுடன் அங்கு வர்த்தக நிலையமொன்றில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வீ. கேமராக்கள் வழியாக கொள்ளையர்கள் வந்த மோட்டார் சைக்கிள் அடையாளம் காணப்பட்டது. அதன் உரிமையாளரான மருதமுனையில் வசிக்கும் தச்சு வேலை செய்யும் ஒருவரை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியபோது மோட்டார் சைக்கிள் தனதென்றும் அதனை தம்மிடம் வேலைசெய்யும் வாழைச்சேனையைச் சேர்ந்த கூலியாட்கள் உணவு எடுத்துவருதவற்காக எடுத்துச் சென்றதாகவும் கூறியுள்ளதுடன் கொள்ளையடித்தவர்களின் விபரங்களையும் போலீசாருக்கு வழங்கியுள்ளார். அதன் பின்னர் சம்பந்தப்பட்டவர்களை வாழைச்சேனை ஓட்மாவடியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *