• August 17, 2019
0 Comments

இஸ்லாமாபாத்:

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளிடம் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மக்மூது குரேஷி, இந்தியாவின் செயல் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மரபுகளுக்கு எதிரானது என்றும் ஒரு ஐநா சபை அமர்வில் விவாதிக்கப்பட வேண்டும் எனவும் ஊடகங்களில் தெரிவித்திருந்தார். மேலும் எங்கள் பாதுகாப்பிற்காக எந்த அளவிற்கும் செல்வோம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *