• August 17, 2019
0 Comments

இலங்கையில் இரத்தினபுரி – கிரியெல்ல பகுதியில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார் . கிரியெல்ல – தும்பர பகுதியில் நேற்று பிற்பகல் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் தும்பர பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் தனது வீட்டிலுள்ள இரும்பு கட்டிலுக்கு கீழ் உறங்கி கொண்டிருந்துள்ள போதே இந்த மின்னலால் தாக்கப்பட்டுள்ளார். அப்போது கவலைக்கிடமான நிலையில் இங்கிரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் பின்னர் சிகிச்சை பலனின்றி பலியானதாக போலீசார் தெரிவித்தனர்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *