• August 17, 2019
0 Comments

ஃபேஸ்புக் நிறுவனம் தனது மொபைல் செயலியில் புதிதாக டார்க் மோட் வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அம்சத்திற்கான பணிகள் துவக்க நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. வரும் வாரங்களில் இந்த அம்சம் முழுமையாக இயங்கும் வகையில் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கலாம். புதிய அம்சம் இன்னும் தயாராகவில்லை என்பதால் இதன் வெளியீடு பற்றி எந்த தகவலும் இல்லை. இதுதவிர ஃபேஸ்புக் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் சேவைகளின் பெயர்களில் ஃபேஸ்புக் பிராண்டிங்கை சேர்த்திருக்கிறது. அதன்படி இன்ஸ்டாகிராம் ஃபிரம் ஃபேஸ்புக் (Instagram from Facebook) மற்றும் வாட்ஸ்அப் ஃபிரம் ஃபேஸ்புக் (WhatsApp from Facebook) என மாற்றப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *