• August 17, 2019
0 Comments

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜைக்காக கடந்த 6-ந்தேதி நடை திறக்கப்பட்டது. 7-ந் தேதி நிறைபுத்தரிசி பூஜை ஐயப்பன் கோவிலில் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

இந்தநிலையில் ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார். தொடர்ந்து நடைபெறும் தீபாராதனைக்கு பின் வழக்கமான பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *