• August 17, 2019
0 Comments

தேவையான பொருட்கள்
வாழைப்பழம்: 5
சர்க்கரை: 1/4 கப் + 1கப்
நெய்: 1/2 கப் + 3/4 கப்
ஏலக்காய் தூள்: 1 தேக்கரண்டி
நீர் : 1/4 கப்
முந்திரி: தேவையான அளவு
உலர்திராட்சை: தேவையான அளவு

செய்முறை
1. பானில் நெய் தடவிக் தனியே வைக்கவும்.
2. ஒரு நான்ஸ்டிக் பானில் நெய் விட்டு சூடாக்கவும் அதனுடன் மசித்த வாழைப்பழம் சேர்க்கவும்.
3. சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும், கலவை கெட்டியாகி திரண்டு வரும் வரை வேக வைக்கவும்.
4. ஒரு சாஸ் பானில் சர்க்கரை எடுத்துக் கொள்ளவும். நீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை வேக வைக்கவும்.
5. காரமல் நிலைக்கு வரும் வரை கொதிக்க வைக்கவும்.
6. பின்பு அதனை வாழைப்பழக் கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கவும், தேவைப்பட்டால் நெய் சேர்த்து நன்கு கிளறவும்.
7. வேறொரு பானில் நெய் சேர்த்து சூடாக்கவும்.
8. பாதாம், முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்க்கவும். பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
9. அதனை நெய்யுடன் சேர்த்து அல்வாவில் ஊற்றி அல்வா திரண்டு வரும் வரை நன்கு கிளறவும்.
10. பின்பு ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
11. பின்பு அல்வாவை நெய் தடவிய பானில் வைத்து ஆறியதும் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
வாழைப்பழ அல்வா ரெடி!!!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *