• August 24, 2019
0 Comments

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதியுடன் 6 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒளிரும் மின்விளக்குகள், நீர்தெளிப்பான்கள் மற்றும் வடிகால் அமைப்பு போன்ற வசதிகளுடன் கூடிய செயற்கை இழை ஓடுதளப்பாதையை காணொலிக் காட்சி மூலமாக இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதேபோன்று, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், வளை கோல்பந்து பயிற்சி பெறும் கல்லூரி மாணவர்களுக்காக 1 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் 55 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *