• August 24, 2019
0 Comments

இலங்கையில் ஹட்டன் நோர்வூட் நிவ்வெளிகம தோட்ட பங்களா பிரிவில் மண்சரிவு காரணமாக 11 குடும்பத்தைச் சேர்ந்த 59 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நிவ்வெளிகம தோட்ட பங்களா பிரிவில் 9ம் எண் லயன் குடியிருப்பின் பின்புறத்தில் நேற்று மாலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவினால் மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. ஆயினும் உயிர் சேதம் எதுவும் இல்லையெனவும், சில பொருட்கள் மட்டும் சேதமாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறியுள்ளனர் .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *