• August 24, 2019
0 Comments

மதுரை மாவட்டம், மேலூர் அருகே கொட்டாம்பட்டியை அடுத்துள்ள கம்பூர் ஊராட்சியில்கடந்த சில வருடங்களாகவே குடிநீர் பிரச்சினை நிலவி வருவதால், இந்தப்பகுதி மக்கள் பல கி.மீ. தூரம் சென்று குடிநீரை எடுத்து வரும் அவலநிலை உள்ளது. இதனால், அங்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்காததால், பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தீர்க்க பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், இன்று காலை அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட 80-க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் கருங்காலக்குடி-நத்தம் சாலையில் திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, டிநீர் பிரச்சினை தொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி செய்த பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அங்கு சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *