• August 17, 2019
0 Comments

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் .தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்தை விட குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இது குறித்து அவர் தற்போது அளித்த பேட்டியில், ” வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் விரைவாக நடைபெற நான்தான் காரணமாக இருந்தேன். எனது வெற்றி நூல் இழையில் பறிபோனது. எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறுகிறேன். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. லட்சக்கணக்கான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், வேலூர் தேர்தலில் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்று இருக்கிறார். தேர்தலுக்கு முன்பாக பாராளுமன்றத்தில் என்.ஐ.ஏ. சட்டமும், முத்தலாக் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. பின்னர் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் சட்ட விவகாரம் பாராளுமன்றத்தில் எழுந்தது. இதன் காரணமாகவே தோல்வி ஏற்பட்டது ” என்று கூறினார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *