• August 17, 2019
0 Comments

இலங்கையில் திருகோணமலை – குச்சவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட மதுரங்குடா பகுதியில் இருவருக்கிடையே உண்டான கைகலப்பில் ஒருவர் கொல்லப்பட்டார் . மற்றொரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு நடை பெற்றது . குச்சவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட மதுரங்குடா பகுதியில் மீன் கடையொன்றில் மூவர் ஒன்றிணைந்து மது அருந்திக் கொண்டிருந்த போது இருவருக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாலேயே இந்த கொலை நடைபெற்றுள்ளதாக போலீசாரின் தொடக்க கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. இதில் கொல்லப்பட்டவர் மதுரங்குழிய-கோடுவாடுவ பகுதியைச் சேர்ந்த வெல்லவகே சுமித் பிரணாந்து (40 வயது) என தெரியவந்துள்ளது.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *