• August 17, 2019
0 Comments

Mi-ன் இந்த சூப்பர் சேலில் பல ஸ்மார்ட்போன்களுக்கு 8,000 ரூபாய் வரை தள்ளுபடி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் Mi எக்ஸ்சேஞ்ச் உடன் 2,000 ரூபாய் தள்ளுபடி என பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 7 Pro, ரெட்மி நோட் 7S, ரெட்மி 7, ரெட்மி 7A, ரெட்மி 6, ரெட்மி 6 Pro போன்ற தொலைபேசிகள் தள்ளுபடி மற்றும் சலுகைகளுடன் Mi.com இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த சலுகை விற்பனையில் ரெட்மீ நோட் 7S மற்றும் ரெட்மீ நோட் 7 Pro ஆகியவை சலுகைகளை பெற்றுள்ளன. அதன்படி 3GB / 32GB வகை ரெட்மீ நோட் 7S-ன் விலை 9,999 ரூபாய், மற்றும் ரூ. 4GB / 64GB வகையின் விலை 11,999 ரூபாய். ரெட்மீ நோட் 7 Pro 4GB RAM + 64GB சேமிப்பு வகையின் விலை 13,999 ரூபாய். இந்த ஸ்மார்ட்போன் 6GB RAM + 64GB சேமிப்பு அளவிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 14,999 ரூபாய் மற்றும் இந்த வரிசையில் டாப்-மாடலான 6GB RAM + 128GB சேமிப்பு அளவு வகை இந்த விற்பனை காலத்தில் 16,999 ரூபாய்க்கு கிடைக்கப்பெரும். இரண்டு ஸ்மார்ட்போன்களும் Mi.com தளத்தில் கிடைக்கப்பெறும்.

அதேவேளையில் ரெட்மீ Y3 ஸ்மார்ட்போனும் இந்த விற்பனையில் இடம்பெற்றுள்ளது. 3GB RAM + 32GB சேமிப்பு அளவு மாடலுக்கு 8,999 ரூபாயும், 4GB RAM + 64GB சேமிப்பு வகைக்கு 10.999 ரூபாயும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு வகைகளும் போல்ட் ரெட், நேர்த்தியான நீலம் மற்றும் பிரைம் பிளாக் வண்ணகளில் வருகின்றன. இந்த விற்பனையில், ரெட்மீ 7-ன் 2GB RAM / 32GB சேமிப்பு வகை 7,499 ரூபாய் என்ற விலையிலும், 3GB RAM / 32GB சேமிப்பு வகை 8,499 ரூபாய் என்ற விலையிலும் கிடைக்கப்பெறும். இது அமேசான் மற்றும் Mi.com தளங்களில் காமட் ப்ளூ, எக்லிப்ஸ் பிளாக் மற்றும் லூனார் ரெட் ஆகிய வண்ணங்களில் விற்பனையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *