• August 17, 2019
0 Comments

காஷ்மீர் மாநில புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தானின் எப்-16 ரக விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொள்ள முயன்றன. அப்போது இவற்றை இந்திய விமானப்படையின் விங் கமாண்டோ குழுவினர் விரட்டிச் சென்று பதில் தாக்குதல் நடத்தினர்.இந்த குழுவில் தமிழகத்தை சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானும் ஒருவராக இருந்தார். இவர் பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தி பிரம்மிக்க செய்தார் . அப்போது அவர் சென்ற மிக்-21 ரக விமானம் விபத்தில் சிக்கி நொறுங்கியது. அப்போது அபிநந்தனின் விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்ததால் அந்த நாட்டு ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார். இதையடுத்து சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கும் பணியை இந்தியா நடத்தியது . இதன் காரணமாக 60 மணி நேரத்திற்கு பின் அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்பினார். இதனைதொடர்ந்து பல்வேறு நிலை பரிசோதனைகளுக்கு பிறகு அபிநந்தன் மீண்டும் விமானப்படையில் சேர்க்கப்பட்டார். அபிநந்தனின் வீரதீர செயலை பாராட்டி அவருக்கு டெல்லியில் நாளை நடைபெறும் சுதந்திரதின விழாவில் ‘வீர் சக்ரா’ விருது வழங்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *