• August 17, 2019
0 Comments

பென்சில்வேனியாவில் Forgotten Friend Reptile Sanctuary என்ற காப்பகத்தில், ராஜ நாக வகையைச் சேர்ந்த பாம்பு ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. பசியில் இருந்த இந்த பாம்பு, தன் வால் பகுதியிலேயே வாயில் நுழைத்து, கடித்து விழுங்க ஆரம்பித்துவிட்டது. உடனே அதை கண்ட அந்த காப்பகத்து ஊர்வன வல்லுநர், அந்த பாம்பை காப்பாற்றியுள்ளார். அதனை வீடியோவும் எடுத்துள்ளார். இது பற்றி அவர், ” கடிப்பது தன் உடல்தான் என தெரிந்ததும், விட்டுவிடும். இந்த காப்பகத்தில் நல்ல முறையில் உணவுகள் கொடுக்கப்படும்போதும், ஏன் இப்படி செய்தது என்று தெரியவில்லை” என்று கூறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி பலரும் அதனை அதிர்ச்சியுடன் பார்த்து வருகின்றனர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *