• August 17, 2019
0 Comments

இப்போது நாட்டில் ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பவர்கள் முறைப்படி படித்திருக்க வேண்டும். மேலும் இந்திய மருத்துவ கவுன்சிலில் அவர்கள் பதிவு செய்து இருக்க வேண்டும் என்று விதிமுறைகள் இருக்கின்றன .அவ்வாறு இந்த அடிப்படையில் இந்திய மருத்துவ கவுன்சிலில் நாடு முழுவதும் 11 லட்சத்து 46 ஆயிரம் பேர் பதிவு செய்து கொண்டுள்ளார்கள் .ஆனால், இப்படி முறைப்படி மருத்துவ கல்வியை முடிக்காமல் நாடு முழுவதும் பலர் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிப்பவர்களில் 57.3 சதவீதம் பேர் முறைப்படி படிக்காதவர்கள் என்று இந்திய சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது. அதிலும் அதிகமாக கிராம பகுதிகளில் இதுபோன்ற மருத்துவர்கள்தான் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்கள். அங்கு வேறு படித்த மருத்துவர்கள் கிடைக்காததால் இந்த போலி மருத்துவர்களிடம் நோயாளிகள் சிகிச்சைக்காக செல்கின்றனர்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *