• August 17, 2019
0 Comments

வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் தொடர்ந்து சோதனை செய்யப்படுகிறது. தற்போது வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் சாட்களை கைரேகை லாக் மூலம் பாதுகாக்கும் வசதி சோதனை செய்யப்படுகிறது. முன்னதாக வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டாவில் சோதனை செய்யப்பட்ட இந்த அம்சம் தற்சமயம் ஆண்ட்ராய்டு பதிப்பிலும் சோதனை செய்யப்படுகிறது.
வாட்ஸ்அப் பீட்டா 2.12.221 பதிப்பை பயன்படுத்துவோருக்கு புதிய பாதுகாப்பும் அம்சம் வழங்கப்படுகிறது. பீட்டா பதிப்பை பயன்படுத்துவோர் செயலியை அப்டேட் செய்து புதிய அம்சத்தை பயன்படுத்தி பார்க்க முடியும். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ மற்றும் அதன்பின் வெளியான இயங்குதளங்களில் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *