• August 17, 2019
0 Comments

அண்மையில் நடிகர் ராகுல் கோஷ் சண்டிகாரில் உள்ள மேரியட் நட்சத்திர உணவகத்தில் தங்கி இருந்தார். அவர் 2 வாழைப்பழம் சாப்பிட்டதற்கு ரூ.442 பில் அளிக்கப்பட்டது . இதுகுறித்து அவர் விமர்சித்து இருந்தார்.
மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஒருவர் இரண்டு அவித்த முட்டை சாப்பிட்டதற்கு ரூ.1,700 பில் கொடுக்கப்பட்டு இருந்தது.அவரும் இதுகுறித்து சமூக வலைதளத்தில் விமர்சனத்தை பதிவிட்டார்.
இந்த இரண்டு வி‌ஷயங்களும் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தின. இந்த நிலையில் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் “நட்சத்திர ஓட்டலில் வாழைப்பழம், முட்டைகளுக்கு இவ்வளவு அதிக விலை வசூலித்தது ஏற்றுக் கொள்ள முடியாதது. இதுபோன்ற முறைகேடான விலை நிர்ணயித்து வர்த்தகம் செய்தால் அது குறித்து உரிய நிறுவனங்களிடம் விளக்கம் கேட்கப்படும். எல்லா ஓட்டல்களும் ஓட்டல் பண்டங்களின் விலையை வெளிப்படையாக வைத்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *