• August 24, 2019
0 Comments

40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதர் தரிசன விழா கடந்த மாதம் 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. வரும் 16-ந் தேதியுடன் தரிசன விழா நிறைவுபெற உள்ளதால் கடந்த ஒரு வாரமாக பக்தர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டி வருகிறது. இதனால், த்திவரதர் வழிபாட்டை மேலும் நீட்டிக்க கோரிக்கை எழுந்து, சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்,” அத்திவரதர் தரிசனம் கடந்த காலங்களில் ஆகம விதிப்படி 48 நாட்கள் தான் நீடித்தது. அதே போல் தான் தற்போதும் 48 நாட்கள் நடக்கும். அதை நீட்டிக்க வாய்ப்பில்லை. திருச்செந்தூர் கோவிலில் சுற்றுப்பிரகார மண்டபம் சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பழமை மாறாமல் கட்டப்பட வேண்டும். தொல்பொருள் துறை அங்கீகாரம் வழங்க வேண்டும் ” என்று கூறினார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *