• August 24, 2019
0 Comments

இரண்டாம் உலகப் போரின் போது தொலைந்துபோன யுஎஸ்எஸ் க்ரூனியான் நீர்மூழ்கிகப்பலின் முன்பகுதியை, கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்குப் பின்னர் அலாஸ்காவின் கடற்கரையோரத்தில் கடல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். லாஸ்ட் 52 ப்ராஜெக்ட்-ஐ சேர்ந்த ஒரு குழு, முன்னோடி ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அலூட்டியன் தீவுகளுக்கு அருகே நீரில் 2,700 அடி (820 மீ) ஆழத்தில் நீர்மூழ்கிக் கப்பலின் இப்பகுதியை கண்டறிந்தது. கப்பலின் கேப்டன் மூழ்கும்போது 70 பயணிகளை கொண்டிருந்த இந்த கேடோ-வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல் கடைசியாக 1942 ஜூலை மாதம் தொடர்புகொள்ளப்பட்டது.
2006 ஆம் ஆண்டில், கப்பலின் கேப்டன் லெப்டினன்ட் கமாண்டர் மேனெர்ட் ‘ஜிம்’ அபேல் – புரூஸ்-ன் மகன்களான பிராட் மற்றும் ஜான் இருவரும் தொலைந்துபோன நீர்மூழ்கிக் கப்பலைத் தேடத் தொடங்கி, பின்னர் ஒரு வருடம் கழித்து அதைக் கண்டுபிடித்தனர். ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் எடுத்தனர் கடந்த ஆண்டு மீண்டும் அதே இடத்திற்கு பயணித்த அக்குழு, 3 டி மாடல்களை உருவாக்க ஃபோட்டோகிராமெட்ரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, விபத்தில் சேதமடைந்த கப்பலை ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் எடுத்தனர்.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பின்னர் இந்த மாத தொடக்கத்தில், இடிபாடுகளின் முக்கிய இடத்திலிருந்து கால் மைல் தொலைவில் கப்பலின் முன்பகுதியையும் கண்டுபிடித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *