• August 17, 2019
0 Comments

இந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை இதுவரை இல்லாத அளவுக்கு பெரு மழையாக பெய்து கொண்டு வருகிறது. அவ்வாறு கடந்த 8-ந்தேதி முதல் தீவிரம் அடைந்த இந்த மழை கேரளாவையே துவம்சம் செய்து கொண்டு வருகிறது. இந்த மழை காரணமாக கேரள மாநிலம் முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதேசமயம் வடக்கு பகுதி மாவட்டங்களான மலப்புரம், வயநாடு ஆகிய இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது. மழை வெள்ளம் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது . நேற்று மட்டும் கவளப்பாறை பகுதியில் 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளன . மேலும் வயநாடு புத்துமலையில் மண்ணில் புதையுண்ட 7 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் மேலும் 40 பேர் காணாமல் போய் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *