• August 24, 2019
0 Comments

இந்தியாவைச் சேர்ந்த விஷ்வநாத், அமெரிக்காவில் ஸ்டூடண்ட் விசாவில் தங்கி படித்து வருகிறார். இவர், நியூ யார்க் அல்பானி நகரில் உள்ள புனித ரோஸ் கல்லூரியில் உள்ள கணினிகளை சேதப்படுத்தியதாக கடந்த பிப்ரவரி மாதம் 22 தேதி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், அவர் யுஎஸ்பி கில்லர் எனும் சாதனத்தை கல்லூரிக்கு சொந்தமான 66 கணினிகளில் பொருத்தியதால், அதிக மின்னழுத்தம் காரணமாக மின் அமைப்புகள் மற்றும் கணினியின் யுஎஸ்பி போர்ட் சேதமடைந்துள்ளது தெரிய வந்தது. விஸ்வநாத் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவருக்கு ஒரு வருட சிறை தண்டனையும், 58,471 டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *