• August 24, 2019
0 Comments

தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர்களுக்கான கருத்தரங்கு திருச்சி தெப்பக்குளம் பி‌ஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த போது, திருச்சி மாவட்டத்தில் உள்ள 250 பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இயற்கை ஆர்வலர் ஓசை காளிதாசன் பேசிய போது,” மரம் நாம் சுவாசிப்பதற்கு எப்படி ஆரோக்கியமான காற்றை தருகிறது என்பது பற்றி நமது குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும். மரங்கள் இல்லாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல் தொடர்பான நோய்கள் அதிகம் ஏற்படுவதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாம் குடிக்கும் நீரில் 80 சதவீதம் ஆறுகளில் இருந்து தான் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. எனவே எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை வராமல் இருக்கவேண்டுமானால் ஆறுகளையும், ஆறுகளை உற்பத்தி செய்யும் மலைத்தொடர்களையும், குறிப்பாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளையும் நாம் பாதுகாப்பதற்கான முயற்சிகளை எடுக்கவேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க தவறினால் அடுத்த தலைமுறைக்கு தண்ணீர் கிடைக்காது ” என்று கூறினார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *