• August 24, 2019
0 Comments

இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரியும் என்ஜிஓ ஸ்பேஸ்ஐஎல்-ம் சேர்ந்து ஆளில்லா விண்கலத்தை அமெரிக்காவின் ஃப்ளோரிடாவின் கேப் கானவெரலிலிருந்து கடந்த பிப்ரவரி 22 ம் தேதி அனுப்பியது. பெரிஷீட் என்னும் பெயருடைய 585 கிலோ எடை கொண்ட, இந்த விண்கலம் எலான் மஸ்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கான் 9 ராக்கெட் மூலம் நிலாவிற்கு அனுப்பப்பட்டது. பூமியை பின்னணியில் வைத்து பெரிஷீட் விண்கலம் செல்ஃபி எடுத்து அந்த செல்ஃபியை 37,600 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இஸ்ரேலிய மிஷன் கண்ட்ரோலுக்கு அனுப்பியுள்ளது. இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா மட்டுமே நிலாவில் வெற்றிகரமாக விண்கலத்தை இறக்கியுள்ளனர். பைபிள், குழந்தைகளின் ஓவியம், இஸ்ரேல் பாடல்கள் மற்றும் இஸ்ரேலிய கொடியை டிஜிட்டல் வடிவத்தில் இந்த விண்கலம் கொண்டு சென்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *