• August 24, 2019
0 Comments

திருவள்ளூரை அடுத்த காக்களூர் பைபாஸ் சாலையில் ஆந்திரா வங்கியுடன் இணைந்த ஏ.டி.எம். மையத்தில், இன்று காலை வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்கச் சென்ற போது ஏ.டி.எம். எந்திரம் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதே போல், திருவள்ளூர்-ஆவடி சாலையில் ராமாபுரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சிண்டிகேட் வங்கியுடன் இணைந்த ஏ.டி.எம். எந்திரம் மற்றும் அதன் எதிரே உள்ள பாங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம். எந்திரத்தையும் மர்ம கும்பல் உடைத்து, கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஏ.டி.எம். எந்திரங்களை முழுவதும் உடைக்க முடியாததால், அதிலிருந்த பல லட்சம் பணம் தப்பியது. 3 ஏ.டி.எம். மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இதற்கு தனிப்படை அமைத்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *