• August 24, 2019
0 Comments

தாவூத் இப்ராகிம் சகோதரரின் நண்பன் கேரளாவில் கண்ணூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். மும்பை குண்டுவெடிப்பு உள்பட பல்வேறு தீவிரவாத செயல்களில் தொடர்புடையவர் தாவூத் இப்ராகிம். இவரது சகோதரர் அனீஷ் இப்ராகிமின் நெருங்கிய நண்பன் முகம்மது அல்டாப் அப்துல் லத்தீப் சையீத். இவர் மும்பையில் உள்ள ஒரு ஓட்டல் உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டியதாக புகார் கூறப்பட்டது . சென்ற 2017-2018-ம் ஆண்டு இந்த சம்பவம் நடைபெற்றது . இதுதொடர்பாக ஓட்டல் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் தெற்கு மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து முகம்மது அல்டாப் அப்துல்லத்தீப் சையீத் மற்றும் அவரது நண்பர்களை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே முகம்மது அல்டாப் அப்துல்லத்தீப் சையீத் துபாயில் இருந்து அவ்வப்போது கேரளா வந்து செல்வதாக மும்பை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . ஆகவே அவர்கள் முகம்மது அல்டாப் அப்துல்லத்தீப் சையீத் எப்போது கேரளா வருகிறார் என்பதை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இப்படியிருக்க அவர் நேற்று துபாயில் இருந்து கேரளாவின் கண்ணூர் வருவது தெரியவந்தது. இதையடுத்து கண்ணூர் விமான நிலையத்தில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது நேற்று காலை முகம்மது அல்டாப் அப்துல்லத்தீப் சையீத் கண்ணூர் விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் அவரை போலீசார் சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்தனர். அதனையடுத்து கைது செய்யப்பட்ட முகம்மது அல்டாப் அப்துல் லத்தீப் சையீத் கண்ணூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 16-ந்தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *