• August 17, 2019
0 Comments

தென்மேற்கு பருவ மழையினால் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டு, வெள்ளத்தால் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. உடனே அங்கு சென்ற துணை முதல்-அமைச்சர், வருவாய்த்துறை அமைச்சர் இருவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்தனர். மேலும் இது தொடர்பாக, இன்று தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பருவ மழை மீண்டும் பெய்யும் சூழலில் எடுக்கப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மக்களுக்கு செய்ய வேண்டிய உதவிகள் மற்றும் மீட்பு நிவாரண பணிகள் பற்றி அங்கு விவாதிக்கப்பட்டது.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *