• August 17, 2019
0 Comments

தற்போது காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சி- பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அந்த மாநில முதல்-அமைச்சராக மெகபூபா முப்தி இருந்து வந்தார். ஆனால் கடந்த 2018 ஜூன் மாதம் பாரதிய ஜனதா தனது ஆதரவை வாபஸ் பெற்றதை அடுத்து மெகபூபா ஆட்சி கவிழ்ந்தது. அதன்பிறகு 6 மாதம் கவர்னர் ஆட்சி நடைபெற்றது . இப்போது ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று கொண்டு வருகிறது. இப்படியிருக்க காஷ்மீருக்கு மத்திய அரசு அரசியல் சட்டம் 370, 35-ன் படி வழங்கி இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது . அதனையடுத்து அந்த மாநிலம் காஷ்மீர்- லடாக் என 2 யூனியன் பிரதேச மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. ஏற்கனவே உள்ள காஷ்மீர் மாநில சட்டசபையில் மொத்தம் 111 தொகுதிகள் இருந்தன. அதில், 24 தொகுதிகள் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்காக ஒதுக்கப்பட்டவை. அந்த பகுதி பாகிஸ்தான் வசம் உள்ளதால் தேர்தல் நடப்பது இல்லை. ஆகவே , 87 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். ஏற்கனவே உள்ள 111 தொகுதிகளில் 4 தொகுதிகள் லடாக் பகுதியில் உள்ளன. அந்த பகுதி சட்டசபை இல்லாத தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் அந்த 4 தொகுதிகளும் இல்லாமல் ஆகி விடுகிறது.
அதனையடுத்து தற்போது காஷ்மீர் மாநிலம் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் 7 தொகுதிகள் கூடுதல் ஆக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் இப்போது காஷ்மீரின் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 114. அதில், 24 தொகுதிகள் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைந்திருக்கின்றன. ஆகையால் , 90 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க வேண்டும். அங்கு அடுத்த வருடம் மார்ச் மாதம் தேர்தல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *