• August 17, 2019
0 Comments

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 5 (வேக வைத்தது)
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 6
பூண்டு – 7 (பல்)
மஞ்சள் தூள் – சிறிது
உப்பு – தேவைக்கேற்ப
வடித்த சாதம் – 3 கப்
எண்ணெய் – தேவைக்கேற்ப
வறுத்தரைக்க
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்,
வத்தல் மிளகாய் – 5
செய்முறை:
1. உருளைக்கிழங்கை வேக வைத்து, மசித்துக் கொள்ளவும்.
2. வறுத்தரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை எண்ணெய் விட்டோ, எண்ணெய் இல்லாமலோ வறுத்துப் பொடிக்கவும்.
3. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், வேக வைத்து மசித்த உருளைக் கிழங்கு சேர்த்து, வறுத்த பொடியைச் சேர்த்து, வடித்த சாதத்தைக் கலந்து கிளறி இறக்கவும்.
4.தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பரிமாறும்போது, பொடித்த அப்பளத்தைப் பொடித்துச் சேர்த்து, மெதுவாகக் கிளறிப் பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *