• August 24, 2019
0 Comments

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் மாவட்ட பள்ளி அணிகளுக்கான கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவுக்கு சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன் துரை தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வருமானவரி துணை கமிஷனர் சுரேஷ் பெரியசாமி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
இதில் ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் கோலபெருமாள் அணி 25-14, 25-12 என்ற நேர்செட்டில் செட்டிநாடு அணியை தோற்கடித்தது. மற்ற ஆட்டங்களில் வேலம்மாள், செயின்ட் பீட்ஸ், சேதுபாஸ்கர், பென்டிக் பள்ளி அணிகள் வெற்றி பெற்றன. பெண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி (ராட்லர்) அணி 25-21, 25-17 என்ற நேர்செட்டில் வேலம்மாள் அணியை வீழ்த்தியது. மற்ற ஆட்டங்களில் லேடி சிவசாமி, பிரசிடென்சி, சிவகாசி நாடார், குண்டூர் சுப்பையா பள்ளி அணிகள் வெற்றி பெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *