• August 24, 2019
0 Comments

நாளை சுதந்திர தினத் திருநாளை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதில், ” இந்தியத் திருநாடு ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து, விடுதலை பெற்ற இந்த வரலாற்று சிறப்புமிக்க இனிய நாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த சுதந்திர தினத் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். முக்கிய இடங்களில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சிலைகளை நிறுவுதல், அவர்களின் பிறந்த நாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் விழாக்கள் நடத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாய் உழைத்து, நம் இந்தியத் திருநாட்டை வல்லரசு நாடாகவும், தமிழ்நாட்டை நாட்டிலேயே முதன்மை மாநிலமாகவும் உயர்த்திட உறுதியேற்போம் ” என்று கூறியுள்ளார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *