• August 24, 2019
0 Comments

உலகம் சுற்ற தடையாக இருக்கும் மொழி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வந்துவிட்டது பாக்கெட் அளவில் உள்ள ஒரு டிரான்ஸ்லேட்டர். ‘லாங்கோகோ’ நிறுவனம் வடிவமைத்திருக்கும் இந்தக் கருவி தமிழ், இந்தி உட்பட 105 மொழிகளில் உள்ள வார்த்தைகளை ஒன்றிலிருந்து இன்னொரு மொழிக்கு உடனடியாக மொழி பெயர்த்துத் தருகிறது. வெறுமனே டெக்ஸ்ட்டாக மொழிபெயர்ப்பது மட்டுமல்லாமல் பேசியும் காட்டுகிறது. இதில் வை-பை வசதியும் இருக்கிறது. சிம் கார்டை பொருத்திவிட்டால் இணைய சேவையையும் பெறமுடியும்.
செயற்கை நுண்ணறி வின் மூலம் இயங்கும் இந்தக் கருவியில் பருவ நிலையைக் கூட நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். 3.1 இன்ச் அளவிலுள்ள ரெட் டினா டிஸ்பிளேயில் மொழி பெயர்க்கப்பட்ட வார்த்தைகளை வாசிப்பது பேரனுபவமாக இருக்கும். நாளுக்கு நாள் இது அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும். அதனால் மொழி பெயர்ப்பின் போது உண்டாகும் சின்னச் சின்ன தவறுகள் காலப்போக்கில் தானாகவே சரியாகிவிடும். ஆன்லைன் தளங் களில் கிடைக்கிறது இந்த பாக்கெட் டிரான்ஸ்லேட்டர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *