• August 17, 2019
0 Comments

ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக கடந்த 10 வாரங்களாக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்கள் விக்டோரியா பூங்காவில் அமைதி பேரணி நடத்திய போது, போராட்டக்காரர்கள் போலீசாரின் தடையை மீறிசாலைக்கு சென்றதால், போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. மேலும், இதைப்போலவே, ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தை முற்றுகையிட்டும் தொடர் போராட்டம் நடத்தியதால், கடந்த இரண்டு தினங்களாக விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆனால், இன்று அதிகாலையில் பெரும்பாலான போராட்டக்காரர்கள் விமான நிலைய வளாகத்தை விட்டு வெளியேறியதால், பலத்த பாதுகாப்புடன் விமான சேவை மீண்டும் தொடங்கியது.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *