• August 24, 2019
0 Comments

தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து, தற்போது ஈரப்பதம் உள்ள காற்று தொடர்ச்சியாக வீசியப்படி உள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்கள் மற்றும் வடமாவட்டங்களில் நிலவும் வெயில் காரணமாக வெப்பச்சலனம் ஏற்பட்டு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *