• August 24, 2019
0 Comments

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அரசியல் மாநாடு மதுரையில் வரும் 17ம் தேதி நடக்கிறது என்று ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமாகாவை மக்களுக்கான இயக்கம் என்பதை கொண்டு சேர்க்க  வரும் 17ம்தேதி மதுரையில் வட்டார, நகர, பேரூராட்சி தலைவர்களின் அரசியல் மாநாடு நடக்கிறது. இதில், தமிழகம் முழுவதும் தமாகாவின் 79 மாவட்டங்களில் உள்ள வட்டார, நகர, பேரூராட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

கிராமம் முதல் பெருநகரம் வரை தமாகா மக்களுக்கான இயக்கம் என்பதை மக்கள் மத்தியில் நிலை நிறுத்துவதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம். தமாகாவை தனித்துவம் கொண்ட கட்சியாக நடத்திட வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் மாநாடு நடைபெற இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *