• August 24, 2019
0 Comments

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் வழியாக வந்த விமானத்தில் இருந்து திருவனந்தபுரத்தை சேர்ந்த கமரூதீன் (27), ரகீலா (39) ஆகியோர் வந்து இறங்கினர்.

திருவனந்தபுரத்தில் இருந்து உள்நாட்டு பயணியாக வந்து இறங்கிய இவர்கள் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். தொடர்ந்து அவர்களது உடமைகளை சோதனை செய்தபோது, உள்ளாடைக்குள் தங்க நகைகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, அவர்களிடம் இருந்து 3 தங்க சங்கிலிகள், 4 மோதிரங்கள் ஆகியற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

ரூ.33 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 872 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *